சாம்லி, நவ.5 உத்தரப்பிரதேசத்தில் இரண்டு சமூகத்தினரிடையே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந் துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உயர்ஜாதியினரின் குடி யிருப்பிற்கு அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டு இருந் தனர். எங்கள் பகுதிக்கு வந்து எப்படி பட்டாசு வெடிக்கலாம் என்று உயர் ஜாதியினர் தாழ்த்தப்பட்ட இளைஞர் களை தாக்கத் தொடங்கினர். தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரி ழந்தார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
மேலும் உயர்ஜாதியினர் கும்பலாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் காலனிக்குச் சென்று குடிசைகள்மீது கல் வீசி தாக்கினர், சில குடிசைகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் கல வரக்கார்களை தடியடி நடத்தி விரட் டினர்.
இது தொடர்பாக காவல்துறை தெரிவித்ததாவது, உயர்ஜாதியினருக்குச் சொந்தமான மைதானத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் காலனியைச் சேர்ந்த சஞ்சீவ் சைனி மற்றும் ராகுல் ஆகியோர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், அங்கு சைனி இறந்துவிட்டார். அதே போல் காலனிகளில் நடந்த தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனை வரும் மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள னர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வன்முறை நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் படைகள் குவிக்கப்பட் டுள்ளன.
No comments:
Post a Comment