எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மும்பை, நவ.5 இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவால் பெட்ரோல் வரியை குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த் திய ஒன்றிய அரசு, நேற்று (4.11.2021) திடீரென பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்தது. இந்த விலை குறைப்பு நேற்று முதல் நடை முறைக்கு வந்தது. இந்த வரிக் குறைப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவால் வரியை குறைத்திருப்பதாக எதிர்க்கட் சிகள் குற்றம்சாட்டுகின்றன.
சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்
5 ரூபாய் விலை குறைப்பு எதற்கும் உதவப் போவதில்லை. முதலில் குறைந் தபட்சம் 25 ரூபாய் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் 50 ரூபாய் குறைக் கப்பட வேண்டும். இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்ததை அடுத்து, பெட்ரோல் விலையில் 5 ரூபாயை ஒன்றிய அரசு குறைத்து உள்ளது. 50 ரூபாய் குறைக்க வேண்டும் என்றால் பா.ஜ.க.வை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என கூறினார்.
ப.சிதம்பரம்
கலால் வரி குறைப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு துணை தயாரிப்பை உருவாக்கியுள்ளன... பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத் திருக்கிறது. குறிப்பாக, அதிக வரிகள் விதிப்பதால் எரிபொருள் விலை அதிக மாக உள்ளது என்ற எங்கள் குற்றச் சாட்டை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் ஒன்றிய அரசின் பேராசை யால்தான் எரிபொருள் மீது அதிகமான வரி விதிக்கப்படுகிறது என ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட் டுள்ளார்.
கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கை யில் கூறியதாவது:-
பெட்ரோல்-டீசல் விலையை ஒன்றிய-மாநில அரசுகள் குறைத்துள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற இடைத் தேர் தல்களில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு எதிராக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் பிரசாரம் செய்தோம். வாக்காளர்களும் அதற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஜனநாயகத்தில் வாக்காளர்களே அதிபர்கள். வாக்கா ளர்கள் கொடுத்த நல்ல தீர்ப்பை அடுத்து பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு உருளை உள்பட அனைத்து பொருட்களின் விலையை குறைக்கும் வரை காங்கிரஸ் போராடும். இதற்காக வருகிற 14-ஆம் தேதி முதல் காங்கிரஸ் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், வேலை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இரும்பு, சிமெண்டு போன்றவற்றின் விலையும் குறைய வேண்டும்.
பெட்ரோல் _ -டீசல் விலையை குறைத்ததை நான் வரவேற்கிறேன். வரி என்ற பெயரில் கொள்ளையடித்தவர் களின் பணம் மக்களை போய் சேர வேண்டும். ஒன்றிய -மாநில பா.ஜனதா ஆட்சிகளின் மோசமான செயல்பாடு களால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறி னார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரியை மேலும் குறைக்க வேண் டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கோரிக்கை விடுத் துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடும்போது, இந்த விலைக்குறைப்பு காரணமாக மாநில அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களின் நலனை குறித்து இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்த நிலையில் நான் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்வது என்ன வென்றால், பெட்ரோலியப் பொருட் களுக்கான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுக்குள் வரும். இதை மோடி கவனத்தில் கொண்டு செயல்படுத்த கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மம்தா
பெட்ரோல் விலை குறைப்பு வெறும் கண் துடைப்பு என்று முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே விண்ணை தொட்டு விட்ட பெட்ரோல் விலை நிலவரத்தில் இதை ஒன்றிய அரசின் தீபாவளி பரிசு என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை. பெட்ரோலிய பொருட்களுக் கான கலால் வரி நிர்ணயத்தில் அடிப் படையான விலைக்குறைப்பு செய்வதே சரியான விலைக்குறைப்பு ஆகும்.
இதுபோன்ற விலைக்குறைப்பு அறிவிப்புகள் கண்துடைப்பு ஆகும் இதற் கிடையே மேற்கு வங்க அரசு பெட் ரோலுக்கு ரூ.5.82-ம், டீசலுக்கு ரூ.11.77-ம் குறைத்து அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
பல்வேறு மாநிலங்களில் வாட் வரி குறைப்பு
பல்வேறு மாநிலங்களில் பெட் ரோல், டீசல் மீதான வாட் வரியை அந்தந்த மாநில அரசுகள் குறைத் துள்ளன.
பெட்ரேல், டீசல் மீதான வரியை குறைத்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைகிறது. இதை பின்பற்றி மாநில அரசுகளும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேசம், கருநாடகா, கோவா, புதுச்சேரி, மணிப்பூர், சிக்கிம், திரிபுரா, மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. ஒடிசாவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ.3 குறைக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment