வாசிங்டன், நவ. 6- சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 221 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்தி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத் தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவ தும் கரோனா வைரசால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்து 107 ஆக அதிகரித்து உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட் டவர்களில் 1 கோடியே 85 லட்சத்து 95 ஆயிரத்து 574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே 61 லட்சத்து 67 ஆயிரத்து 345 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்து 53 ஆயிரத்து 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment