இப்போதும் மோடி அரசு நல்லது செய்யவில்லை..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

இப்போதும் மோடி அரசு நல்லது செய்யவில்லை..!

 பெட்ரோல் ரூ. 70-க்கு கிடைப்பதே உண்மையான விலை குறைப்பு!

காங். செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

புதுடில்லி, நவ. 6 - பெட்ரோல் - டீசலுக்கான கலால் வரியை குறைத்து மோடி அரசு அறிவித்து இருந்தாலும், இதுவும் ஒரு ஏமாற்றுதான் என்று  புள்ளிவிவரங்களுடன் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடந்த மே 2014-ஆம் ஆண்டு (மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) பெட்ரோல் விலை 71 ரூபாய் 41 காசுகள். டீசல் விலை 55 ரூபாய் 49  காசுகள். அப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 105.71 டாலர்கள். தற்போதோ கச்சா  எண்ணெய் விலை ஒரு பேரல் 82 டாலர்கள் மட்டும்தான்என்று குறிப்பிட்டுள்ள சுர்ஜேவாலா, “எனவே 2014ஆம் ஆண்டின் விலைக்கு இணையாக எப்போது நிலைமை வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், “காங்கிரஸ் ஆட்சி யில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாய் 48 காசுகளா கவும், டீசல் மீதான கலால் வரி  லிட்டருக்கு 3 ரூபாய் 56 காசு களாகவும் இருந்தது. ஆனால் மோடி அரசில் பெட்ரோல் மீதான கலால் வரி - (2021 நவம்பர் 3-ஆம் தேதி 32 ரூபாய் 90 காசுகளாக இருந்தது) தற்போது 5 ரூபாய் குறைக்கப்பட்ட பின்னரும் 27 ரூபாய் 90 காசுகளாக உள்ளது.  இதேபோல டீசல் மீதான கலால்  வரி- 31 ருபாய் 80 காசுகளி லிருந்து, தற்போது 10 ரூபாய் குறைக்கப்பட்ட பின்னரும் 21  ரூபாய் 80 காசுகளாக உள்ளது.  நடப்பாண்டில் மட்டும் பெட்ரோல்  விலை 28 ரூபாயும், டீசல் விலை 26 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  எனவே விலையை குறைத்து விட்டோம் என்று மக்கள் மத்தி யில் பொய்யான தோற்றத்தை பாஜக அரசு உண்டாக்க வேண்டாம்என்றும் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி நீக்கம் - விலை குறையும் வாய்ப்பு அதிகரிப்பு

புதுடில்லி நவ.6    எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக சந்தைப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் பொருட்களின் விலைகளும் வரலாறு காரணாத  அதிகரித்து வருவது பொதுமக்களிடையே, குறிப்பாக இல்லத்தரசிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டருக்கு ரூ. 130 முதல்  ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு பொதுமக்களிடையே ஆட்சியாளர்கள் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சமீபத்தில் நடைபெற்று முடிந்த பல மாநில இடைத்தேர்தல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு கடுமையான நெருக்கடியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,  பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை சற்று குறைத்த ஒன்றியஅரசு, இறக்குமதி செய்யப்பட்டும் சமையல் எண்ணைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 2.5 சதவிகித செஸ் வரியை நீக்கி அறிவித்து உள்ளது.  சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி உள்ளது.

2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல்கள் வர உள்ளதால், எண்ணெய் பொருட்களின் விலை உயர்வு தேர்தலில்  கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என  எண்ணிய ஒன்றியஅரசு, தற்போது எண்ணெய் பொருட்களின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கெனவே  இறக்குமதிக்கான சுங்கவரியை படிப்படியாக குறைத்து வந்தது  மட்டுமின்றி 2022ஆம் ஆண்டு மார்ச்மாதம்  31ஆம்தேதி வரை அக்ரி செஸ் வரியையும் குறைத்துள்ளது.

மேலும் எண்ணெய்ப் பொருட்களின் விலையை குறைக்க  எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பொருட்களின் சேமிப்பு வரம்பை மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று  ஒன்றிய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment