வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

சியோல், நவ. 6- உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், அய்.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டு கொள்ளாமல் 2006ஆம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டு களை சோதித்து வந்துள்ளது. அத்து டன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோ தித்து வருகிறது.

இதன் காரணமாக அந்த நாட் டின் மீது அய்.நா. பாதுகாப்பு கவுன் சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த சோத னைக்கு மத்தியில் அங்கு கரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லை கள் மூடப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது. உணவுப்பொருட் களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தற்போதையை நிலைமையை வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், 1990-களில் அங்கு நிலவிய பஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளார். ‘ஆர் டியஸ் மார்ச்என்று அழைக்கப்பட்ட அந்த பஞ்சத்தில் லட்சக்கணக்கா னோர் செத்து மடிந்தது வரலாற்றின் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது. இதற்கிடையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கிம் ஜாங் அன் சமீபத்தில் உத்தர விட்டது, மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வரக்கூடிய அறு வடையை வட கொரிய மக்கள் நம் பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ள னர். அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தை யும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல் லாயிரக்கணக்கான மக்கள் வயல்க ளுக்கு அனுப்பப்படுகின்றனர். அறு வடையின்போது திருட்டுப் போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண் டனை விதிக்கப்படும் என்றும் வட கொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment