தஞ்சாவூர், நவ. 3- தமிழ்நாட்டில் வடக்கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலை யில் கடந்த 28-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதில் தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடியு டன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுமார் 10,000 ஏக்கரில் சம்பா இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி உள்ளது. மேலும் மழை இடை விடாது பெய்து வருவ தால் வயல்வெளிகள் முழு வதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் அறு வடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சாய்ந்து இருக்கின்றன.
இதேபோல் திருவா ரூர் மாவட்டத்திலும் தொடர் மழையால் 10,000 ஏக்கரில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயத் தில் உள்ளது. பிரசித்தி பெற்ற பிறவிமருந்தீஸ்வ ரர் கோவிலுக்குள் தண் ணீர் புகுந்ததால் அதனை வடியவைக்கும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு ஓட்டு வீடுகள் இடித்து விழுந்தன.
நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மற்றும் சம்பா-தாளடி இளம் நாற்றுகள் உள்பட சுமார் 6,000 ஏக்கரில் மூழ்கி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 300 ஏக் கரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டம் முழுவதும் பெய்து வரும் இடைவிடாத தொடர் கனமழையால் வயல் வெளி எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக் கிறது. இதனால் அறுவ டைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களையும், இளம் நாற்றுகளான சம்பா-தாளடி பயிர்க ளையும் காப்பாற்றுவதாக விவசாயிகள் தண்ணீரை வடியவைக்க போராடி வருகின்றனர். வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என விவ சாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment