அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செய்யூர், நவ. 3- மதுராந்தகம் அருகே இல்லம் தேடி கரோனா தடுப்பூசி செலுத் தும் திட்டத்தினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் நேற்று (2.11.2021) தொடங்கி வைத்தார். அப்போது, வரும் 30ஆம் தேதிக்குள் அனை வருக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டு இருப் பதாக தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட் டம் மதுராந்தகம் வட்டம் சரவம்பாக்கம் பகுதியில் இல்லம் தேடி கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நடமாடும் கரோனா தடுப் பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நல்லா மூர், கீழக்கரணை, காட்டு தேவாதூர், விளங்கனூர் ஆகிய கிராமங்களில் தடுப் பூசி போடும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசுகை யில்: வரும் 30ஆம் தேதிக் குள் அனைவருக்கும் முதல் தவணை கரோனா தடுப் பூசி செலுத்தும் பணி 100 சதவீதம் இலக்கை அடை யும். இப்பணியை முடிக்க தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது. செங்கல் பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக கிராமப்புறங்க ளில் உள்ள இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 7.64 கோடி. இதில், நேற்று 1.11.2021 வரை மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 18 ஆயிரத்து 663 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட் டுள்ளது. டெங்கு வைரஸ் தொற்றை தடுக்கும் வகை யில் முன்னேற்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தீபாவளியை பாதுகாப் பான முறையில் கொண் டாட வேண்டும். தீ தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சுகாதார மற்றும் மருத்து வமனைகளில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment