முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு எதிரொலி-புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு எதிரொலி-புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதி

மாமல்லபுரம், நவ. 3- மாமல்ல புரம், அடுத்த பூஞ்சேரி பகுதியில் அஸ்வினி (வயது 25), என்ற நரிக் குறவப் பெண் வசித்து வருகிறார். இவரது சமூ கத்தை சேர்ந்த சில தோழி களுடன் கடந்த அக்டோ பர் 24ஆம் தேதி மாமல் லபுரம் சிறீதலசயன பெரு மாள் கோயிலில் தமிழ் நாடு அரசு மூலம் இலவச மாக வழங்கப்படும் அன்ன தானத்தை சாப்பிட சென் றார். அப்போது, திருப்பி அனுப்பிவிட்டதாக, அந்த நரிக்குறவப் பெண் தனக்கு நேர்ந்த கொடு மைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.

இந்த, வீடியோ தமிழ் நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. முதலமைச்ச ரின்அறிவுறுத்தலின் பேரில், இந்து சமய அற நிலையத் துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அன்றுஅந்தப் பெண்ணை அழைத்து ஆறுதல் கூறி, சமாதானப் படுத்தி அப்பெண்ணுடன் அமர்ந்து கோயிலில் அன்ன தானம் சாப்பிட்டார்.

அப்போது, அந்தப் பெண், அமைச்சரிடம், `எங்கள் சமூகத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி மெய்க்கால் புறம்போக்கில் இடம் வழங்கப்பட்டது. அந்த, இடத்தில் வசித்து வருகி றோம். எங்களுக்கு அடிப் படை வசதிகள் எதுவும் இல்லைஎன முறையிட் டார். முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உத்தரவின் பேரில்அந்த பகுதியில் வீட்டுக்கு வீடு குழாய் பொருத்தும் பணி, குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படு கிறது. இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளை உங்கள் தொகு தியில் முதலமைச்சர் துறை யின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment