நவம்பர் 27:சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

நவம்பர் 27:சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள்

மண்டல் குழுவின் பரிந்து ரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன்றத்தில் (7.8.1990) முழங்கியவர்.

காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்;

 மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்;

சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரை சூட்டியவர்;

பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது - அவரது படம் நாடாளுமன்றத்தில் இடம் பெற செய்தவர்;

 அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறையை அறிவித்தவர்.

மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலையிலும் உறுதியாய் இருந்தவர்;

 ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த முறையை எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளையில், நாங்கள் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்என மக்களவையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.

இந்திய அரசியலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.

அவரது நினைவு நாளில் (27.11.2021), அவரை வணங்குவோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம்.

வி.பி.சிங் வாழ்க.

-கோ.கருணாநிதி

பொதுச் செயலாளர், ..பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment