273 பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு செம்மொழி நூலகம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

273 பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு செம்மொழி நூலகம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, நவ.29 தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் போது பிற்படுத் தப்பட்டோர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால், கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்க 273 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு நூலகம் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 2 கோடியே 73 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு பிற்படுத்தப் பட்டோர் நல இயக்குநர், சிறுபான்மையினர் நல இயக்குநரின் கடிதங்களில், “273 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விடுதிக்கும் செம்மொழி நூலகம் என்ற பெயரில் தலா ஒரு நூலகம் அமைக்கலாம். இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு ஒரு குழுவினை அமைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

நூலகம் அமைய உள்ள அறையின் நுழைவாயிலில் செம்மொழி நூலகம் என்ற பெயர் பலகை நிறுவப்படும். கல்லூரி விடுதிகளில் தலா ரூ.50,000 செலவில் புத்தகம் வழங்கப்படும். தளவாட பொருட்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். நூலகத்தில் தலைசிறந்த மற்றும் தரமான புத்தங்களை தேர்வு செய்ய மாநில அளவிலான குழு அமைக்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்த தேவைப்படும் 2 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரம் ஒப்புதல் வழங்கி ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து  உபரி நீர் வெளியேற்றம்

60 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை, நவ.29 பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப் படுவதால் 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து திருவள்ளுர் சுற்றியுள்ள பகுதிகளான ஊத்துக்கோட்டை, தாமரைப் பாக்கம், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவலங்காடு ஆகிய பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித் துள்ளது. நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 7,720 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந் நிலையில், நேற்று (28.11.2021) மாலை 6 மணியிலிருந்து நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 12000 கனஅடியாக அதிகரித் துள்ளது. இதனால் பூண்டி நீர்த்தக்கத்திலிருந்து உபரி நீர் வினாடிக்கு 12,000 கனஅடி கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால்  தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம்  உயர்வு

சென்னை, நவ.29 வடகிழக்கு பருவமழையால்  தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து இருப்பது நீர்வளத்துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழவதும் பரலாவக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள

7 ஆயிரம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 90 அணைகளில் 206 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தற் போது வரை 20 அணைகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும், பல அணைகள், ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது.

இந்நிலையில் மழையால் மாநிலம் முழுவதும்

35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந் துள்ளது. இது தொடர்பாக, மாநில நீர் வள ஆதார விவர குறிப்பு மய்யம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.

No comments:

Post a Comment