அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர்கூட்டமைப்பு தீர்மானம்
சென்னை, நவ. 29- அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கில் 27.11.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் துணைத் தலைவர் உ.சின்னையா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி கூட்டமைப்பின் நடவடிக்கை கள் குறித்து அறிக்கை வாசித் தார். ஜாதிவாரி கணக்கெடுப்பு, கிரிமிலேயர் மற்றும் 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக் கம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட மைப்பின் செயல்தலைவராக தெலுங்கானா பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் தலை வர் உ.சின்னையா, பொதுச் செயலாளராக கோ.கருணா நிதி, பொருளாளராக எஸ்.பிர பாகரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டனர். காப்பாள ராக புதுவை மேனாள் முதல் வர் வே நாராயணசாமி, தலை வராக மேனாள் ஓபிசி நாடாளு மன்ற பேரவை தலைவர் வி. அனுமந்தராவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
முன்னதாக கூட்டமைப் பின் பிரதி நிதிகள் தந்தை பெரியார் சிலை மற்றும் நினை விடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பொதுக்குழு கூட்டத்தில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் மற்றும் சமூகப் புரட்சியாளர் ஜோதி ராவ் பூலே ஆகியோரது நினைவு நாளையொட்டி அவர்களது படங்களுக்கு உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். கடும் மழையையும் பொருட்படுத் தாது தெலுங்கானா, ஆந்திரா, உ.பி., மற்றும் தமிழ் நாட்டின் இதர மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். வரும் மாதங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நிறைவேற்றிட நாடு முழு வதும் நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட் டங்கள் நடத்துவது என்றும் 2022 மார்ச் மாதத்தில் புது டில்லியில் மிகப் பெரிய ஆர்ப் பாட்டம் நடத்துவது என்றும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment