மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை, நவ.29 குமரி கடல் மற்றும் அதனை ஒட் டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங் களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்து வரு கிறது.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மய்யத்தின் இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை
நாளை (செவ்வாய்க் கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை யும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை யும், வடமாவட்டங்கள் மற் றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும்.
1-ஆம் தேதி (புதன்கிழமை) அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் இருக்கும். 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment