சனா, நவ. 3- ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலை மையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படை களுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றன. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மரிப் மாகாணத்தில் உள்ள மசூதி மற்றும் மதப்பள்ளியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் இரண்டு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணை தாக்குதலில் மசூதி மற்றும் மதப்பள்ளியில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 29 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
குகை இடிந்து
தீயணைப்பு வீரர்கள் பலி
பிரேசிலா, நவ. 3- பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ மாகாணம் அல்டினோபொலிஸ் நகரின் தீயணைப்பு பிரிவை சேர்ந்த வீரர்கள் அப்பகுதியில் உள்ள டுஅஸ் போகஸ் என்ற குகையில் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த பயிற்சியில் 26 வீரர்கள் ஈடுபட்டனர்.
குகைக்குள் வீரர்கள் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது குகையின் மேற்கூரை பகுதி இடிந்து விழுந்தது. இதில், 26 தீயணைப்பு வீரர்களும் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் குகைக்குள் சிக்கியவர்களில் 5 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், குகை இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் 9 பேரின் நிலை என்ன ஆனது என தெரி யாததால் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment