நியூயார்க், நவ. 3- உலகம் முழு வதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர் களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண் ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத் தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலை யிலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.78 கோடி யாக உயர்ந்து உள்ளது. இதன்படி உலகம் முழுவ தும் தற்போது 24,78,24,488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் பாதிப் பில் முதலிடத்தில் இருக் கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.6 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 7.46 லட்சம் பேர் உயிரிழந் தும் உள்ளனர். 2ஆவது இடத்தில் இருக்கும் இந் தியாவில் 3.42 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர். 4.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 708 கோடி கரோனா தடுப் பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. அதில் 302 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்து கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52.02 லட்சம் பேருக்கு சுகாதா ரத்துறை பணியாளர்கள் தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ளனர். உலக அளவில் மிக அதிக அளவாக சீனாவில் 224.9 கோடி தடுப்பூசிகளும், இந்தியாவில் 107.19 கோடி தடுப்பூசிகளும் இது வரை செலுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment