பிரேசிலா, நவ. 3- பிரேசில் நாட்டின் மினஸ் கிரெய்ன் மகாணத்தின் வர்ஜிஹா நகரில் உள்ள சில வங்கிக் கிளைகளில் தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட கொள்ளைக் கும் பல் திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத் தது.
இதனை தொடர்ந்து வர்ஜிஹா நகரின் வெளிப் பகுதியில் உள்ள இரண்டு பண்ணைவீடுகளில் சுமார் 50 காவல்துறையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அந்த இரண்டு பண்ணை வீடுகளிலும் பயங்கர ஆயுதங்களுடன் மொத்தம் 25 கொள்ளை யர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் சுற்றி வளைத்ததை உணர்ந்த கொள்ளையர் கள் துப்பாக்கிச்சூடு நடத் தினர். கொள்ளையர்க ளின் தாக்குதலுக்கு காவல் துறையினரும் பதில் துப் பாக்கிச்சூடு நடத்தனர். இரு தரப்பினர் இடை யேயும் பயங்கரமான துப்பாக்கிச்சண்டை நடந்தது. காவல்துறையி னர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முதல் பண்ணை வீட்டில் இருந்த 18 கொள் ளையர்கள் மற்றும் இரண்டாவது பண்ணை வீட்டில் இருந்த 7 கொள் ளையர்கள் என மொத்தம் 25 கொள்ளையர்கள் சுட் டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப் பட்ட கொள்ளையர்களி டம் இருந்து அதீநவீன துப்பாக்கிகள், வெடி குண்டுகள் என பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. இதன் மூலம் வங்கிகளை கொள்ளை யடிக்க திட்டமிட்டிருந்த கொள்ளையர்களின் திட்டம் முறியடிக்கப்பட் டது.
No comments:
Post a Comment