கரோனா 2 டோஸ் தடுப்பூசி வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

கரோனா 2 டோஸ் தடுப்பூசி வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க அனுமதி

 சென்னை, நவ. 3- அமெரிக் காவுக்கு செல்ல வெளி நாட்டவர்களுக்கு 8-ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற புதிய பன்னாட்டு விமான பயண கொள்கையை அமெ ரிக்கா அமல்படுத்துகிறது.

வருகிற 8ஆம் தேதி முதல் அமெரிக்க குடியு ரிமை பெறாத, குடியே றாத விமான பயணிகள், அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்றால், விமானத்தில் ஏறும் முன்பு கரோனாவுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்கள், சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள் அல் லது தடுப்பூசி போடாத வெளிநாட்டினர் என யாராக இருந்தாலும், புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு பரி சோதனை செய்யவேண் டும். முழுமையாக தடுப் பூசி போடப்பட்ட வெளி நாட்டினர் 8-ஆம் தேதி முதல் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக அமெரிக்காவின் வடக்கு மற்றும் தென்மேற்கு நில எல்லைகளில் பயணிக்க முடியும்.

அமெரிக்காவுக்கு, விமானத்தில் ஏறும் முன்பு தடுப்பூசி போட்ட தற்கான ஆதாரத்தை வழங்கவேண்டும். உலக சுகாதார அமைப்பின் அவ சரகால பயன்பாட்டுக்கு பட்டியலிடப்பட்ட தடுப் பூசிகள் போட்டதற்கான சான்றுகளை ஏற்றுக் கொள்வதாக தீர்மானிக் கப்பட்டுள்ளது. 2 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந் தைகள் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு கரோனா பரிசோ தனை செய்யவேண்டும்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment