கொழும்பு, நவ. 3- முதல்கட் டமாக, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்தவர் களுக்கு பைசர் தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத் தப்படும். அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு செலுத்தப் படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இலங்கையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப் பட்டு இருந்த கட்டுப்பாடு கள் கடந்த மாதம் விலக் கிக் கொள்ளப்பட்டன. இதன்பிறகு அங்கு பொரு ளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும் பியது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு மீண் டும் அதிகரிக்கும் என அந்நாட்டு மருத்துவ வல் லுநர்கள் எச்சரித்துள்ள னர்.
இந்த சூழலில்தான் அங்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இலங் கையில் மொத்த மக்கள் தொகையில் 62சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள் ளனர். இலங்கையில் தற் போது தினசரி கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 500- க்கும் கீழ் உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 20- க்கும் கீழ் பதிவாகி வருகிறது.
No comments:
Post a Comment