சென்னை, நவ. 3- நம்மி டையே இருக்கும் பல முதலீட்டு திட்டங்களில் சிலவற்றிற்கே மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் அரசின் ஆதரவு பெற்ற சில திட்டங்களுக்கு என்றுமே வரவேற்புண்டு. இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மிக லாபகரமான ஒரு திட்டமாக ஊதிய தாரர்கள் கருதுகின்றனர். இது அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பது குறிப் பிடத்தக்கது.
சம்பளதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓய்வூ திய திட்டமிடலாகும். இந்த சேமிப்பு திட்டம் வரி சேமிப்புக்கும் உதவும் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.
நீண்டகால நோக்கங் கள் அல்லது ஓய்வு காலத் திற்கான சிறந்த முதலீட்டு திட்டம் பிபிஎஃப். ஏனெனில் முதலீட்டிற்கு ஆபத்து இல்லாத ஒரு சிறந்த முதலீடு இது. இந்த 15 ஆண்டுகால திட்டத் தில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ் வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
இந்தியரான எந்த வொரு தனிப்பட்ட நப ரும் இந்த வைப்பு நிதி கணக்கினை தொடங் கலாம். என்ஆர்அய்- க ளுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதி யில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங் கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளுக்கு சென்றிருந் தால், அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ள லாம். இதே மைனர் குழந் தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.500 முதல் அதி கபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண் டில் அதிகபட்சம் 12 தவ ணைகளாக, உங்களது முதலீட்டு தவணையை செய்து கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சல் அலுவலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளில் தொடங்கிக் கொள்ள லாம். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, அய்சிஅய்சிஅய் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். இந்த கணக்கை நீங்கள் இணை யம் மூலமாக எளிதாக தொடங்கலாம். மேலும் நேரடியாக கிளைக்குச் சென்று தொடங்கலாம். இதற்காக அடையாள அட்டை, முகவரி சான்றி தழ், ஒளிப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
மாதம் சுமார் ரூ.6,000 முதலீட்டின் மூலம், வரு டத்திற்கு ரூ.70,000 முத லீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுள் முடிவில் நீங் கள் ரூ.10,50,000 முதலீடு செய்திருப்பீர்கள். பிபிஎஃப் வட்டி விகிதம் தற்போது 7.1% ஆக உள்ளது. அதன் அடிப்படையில் கிடைக்க கூடிய மொத்த வட்டி ரூ.8,48,498. ஆக மொத்தம் 15 வருடம் கழித்து உங்களது மொத்த முதிர்வு தொகை ரூ.18,98,498.
இதே தொகையை அடுத்த 5 வருடங்களுக்கு நீட்டித்தால், 20 ஆண்டுகள் கழித்து, உங்களது முதிர்வு தொகை ரூ. 31,07,201. மேலும் இதனை அடுத்த 10 வருடங்களுக்கு நீட்டித் தால், 30 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை ரூ.72,10,425.
இவ்வாறு உங்கள் முதலீட்டை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிப்ப தால் உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ.72 லட்சத்திற்கு மேல் இருக்கும்.
No comments:
Post a Comment