ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் பூஞ்சேரி நரிக்குறவர் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் பூஞ்சேரி நரிக்குறவர் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,நவ.4- தமிழ்நாடு முதல மைச்சர் மு..ஸ்டாலின் இன்று (4.11.2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட் டைகள், வாக் காளர் அடையாள அட்டைகள், ஜாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல்,  அங்கன் வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள் வதற்கான ஆணை ஆகியவற்றையும் வழங்கினார்.

சிறு தொழில் செய்ய வங்கிக் கடன்

முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், பூஞ்சேரி கிராமத் தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 நபர்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள், 6 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக் கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள்,  18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள்,  88 நபர்களுக்கு இருளர் (பழங்குடியினர்) சாதி சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சாதிச் சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், சுயவேலை வாய்ப் பினை உருவாக்க  செயற்கை  முறை ஆபர ணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்க 18 நபர்களுக்கு பயிற்சி ஆணைகள்முத்ரா திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் கடனுதவிசிறுதொழில் செய்வதற்கான வங்கிக்கடன் திட்டத்தின் கீழ்  33 நபர் களுக்கு ரூ.10,000/- வீதம் 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனுதவி, 75 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன் மொழிவு ஒப்புதல், 'மெட்ராஸ் அட் டாமிக் பவர் ஸ்டேஷன்' நிறுவனத்தின் மூலம் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மய்யம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளிக்கு கூடுதலாக இரண்டு புதிய வகுப் பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆணை, என மொத்தம்  282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

பயனாளிகள் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர்

பவானி மற்றும் அஸ்வினி ஆகியோர்  தமிழ்நாடு முதலமைச்சர் தங்கள் இல்லங் களுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அவர்களது அழைப்பினை ஏற்று,  தமிழ்நாடு முதல மைச்சர், அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று, குடும்பத்தி னரி டம் நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து,  தமிழ்நாடு முதலமைச்சர் நரிக் குறவர் மற்றும் இருளர் குடியிருப்பு களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, அவர் களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.     

வாழ்வாதாரத்தை மேம்படுத்த

மேலும், பூஞ்சேரி ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின் சாரம் மற்றும் சாலை வசதிகளை முழு மையாக ஏற்படுத்தி, அவர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின்  உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில்  ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளு மன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, முத லமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலு வலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல் பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ..ராகுல் நாத், செங் கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மரு.எம்.சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் து.செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment