மத்தூர் தோழர் மானமிகு அரங்க. இரவிக்கு வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

மத்தூர் தோழர் மானமிகு அரங்க. இரவிக்கு வீர வணக்கம்

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட செய லாளராகவும், திருப்பத் தூர் மாவட்ட இணைச் செயலாளராகவும், கிருட்டினகிரி மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து அரும்பணி யாற்றிய மத்தூர்  தோழர் அரங்க. இரவி (வயது 53) அவர்கள் நேற்று (3.11.2021) மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவருக்கு வீர வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம்.

குடும்பமே கழகக் குடும்பமாகும். மாணவர் பருவந்தொட்டு இயக்க ஈடுபாடு கொண்ட அவரின் மறைவு கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும்.

அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரின் வாழ்விணையர் ஜான்சிராணி, அவரது மகனும், மாவட்ட மாணவர் கழக  அமைப்பாளர் நிலவன், மகள் யாழினி  உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் கழகத் தோழர்களுக் கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங் கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4-11-2021

குறிப்பு: அரங்க. இரவி அவர்கள் வாழ் விணையர் ஜான்சிராணி, மகன் நிலவன் ஆகியோரிடத்தில் கழகத் தலைவர் தொலைப் பேசி மூலம் ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment