பூண்டி ஏரியின் நீர்மட்டத்தை 5 டிஎம்சியாக உயர்த்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

பூண்டி ஏரியின் நீர்மட்டத்தை 5 டிஎம்சியாக உயர்த்த முடிவு

பாலாற்றில் கதவணை, கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை

சென்னை, நவ.5 ரூ.5 ஆயிரம் கோடியில் பூண்டி ஏரியின் கொள்ளளவை 5 டிஎம் சியாக உயர்த்தவும், செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரை சிக்கராயபுரம் குவாரிக்கு திருப்பி விடவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. மேலும், பாலாற்றில் கதவணையும், கொசஸ்தலையாற்றில் தடுப்பணையும் அமைத்து 15 டிஎம்சி வரை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் நீராதாரங்களை பெருக் குவதில் உரிய கவனம் செலுத்தி வருகிறது.

அதன்பேரில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிதாக தடுப் பணைகள், கதவணைகள், ஏரி, குளங்கள் புனரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். இதை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராம மூர்த்தி மாநிலம் முழுவதும் தடுப்பணை, கதவணை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்ய மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீரை சேமிக்க தடுப்பணை, கதவணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, சென்னை மாநகர் மற்றும் புறநகரில் 15 டிஎம்சி நீரை வரை சேமிக்கும் வகையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தடுப்பணை, கதவணை அமைக் கப்படுகிறது. பாலாற்றில் வாயலூரில் ஏற்கெனவே, தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கதவணைகளாக மாற் றப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 1.50 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும்.

அதே போன்று பாலாற்றில் உதயம் பாக்கத்தில் 1.8 டிஎம்சி வரையும், பாலூரில் 1.54 டிஎம்சி சேமிக்கும் வகை யிலும் கதவணை அமைக்கப்படுகிறது.

கொசஸ்தலையாற்றை பொறுத்த வரையில் காரனோடை, வள்ளியூர், கெருகம்பாக்கம், நெய்யூரில் அரை டிஎம்சி நீர் தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. அதே போன்று ராமஞ்சேரியில் புதிதாக நீர் தேக்கம் அமைத்தால் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, அதற்கு பதி லாக அங்கு ஒரு கதவணை அமைத்து நீர் சேமிக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை சிக்கிராயபுரத் துக்கு திருப்பி விடப்படுகிறது. இதற்காக, செம்பரம்பாக்கம் ஏரியில் அணைக்கட் டுகள் அமைத்து, அங்கிருந்து கால்வாய் வழியாக சிக்கராயபுரம் குவாரிக்கு திருப்பி விடப்படுகிறது.

அதே போன்று 3.3 டிஎம்சி கொள் ளளவு கொண்ட பூண்டி ஏரியை 2 டிஎம்சி வரை ஆழப்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது 5 டிஎம்சி வரை கொள்ளளவு ஏற்படுத்த முதற்கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 15 டிஎம்சி நீர் வரை கூடுதலாக சேமிக்க முடியும். இதன் மூலம் பருவமழை வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க முடியும். இந்த திட்டத்துக்காக உலக வங்கியிடம் நிதியுதவி பெறுவது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உயர் அதிகாரிகளுடனான ஆலோசித்து வருகிறார்.

தற்போது, சென்னை மாநகரின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் பூண்டி, பூழல், செம் பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகள் மூலம் 12 டிஎம்சி வரை மட்டுமே சேமிக்க முடி கிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாறு, கொசஸ் தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல டிஎம்சி நீர் வீணானது. இவ்வாறு வீணாகும் நீரை சேமித்து வைக்க கத வணை, தடுப்பணை அமைப்பதன் மூலம் மேற்பகுதியிலும், கீழ்பகுதியிலும் நீரை சேமித்து வைக்க முடிகிறதுஎன்றார்.

No comments:

Post a Comment