காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, நவ.5  குடும்பத்தின ருடன் நேரம் செலவிட காவல் துறை யினர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 13-9-2021 அன்று நடை பெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவா தத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற் காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரை யிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப் படும் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல் படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவல் துறையினர் அனைவருக்கும் வாரத் தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் மு..ஸ்டாலின் 3.11.2021 அன்று உத்தரவிட்டுள் ளார். அதற்கான அரசாணை   பிறப் பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் நலனை கருத்தில்கொண்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவல்துறையின ருக்கு அருமருந்தாக விளங்குவ தோடு, புத்துணர்ச்சியோடும், உற் சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக் கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தன்மையை ஆராய

துல்லிய பகுப்பாய்வு மய்யம்

கோயம்புத்தூர், நவ.5  இந்தி யாவின் முன்னணி பகுப்பாய்வு சேவை நிறுவனமான மெட்ரோ போலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் தனது புதிய மையத்தை கோயம் புத்தூரில் தொடக்கியுள்ளது.

இம்யூனோ லிஸ்டர் மெட்ரோ போலிஸ் லிமிடெட் என பெயரிடப் பட்டுள்ள இந்த நிறுவனம், 3 ஆயிரம் சதுரஅடிப் பரப்பில் உருவாக்கப் பட்டுள்ளது. மாதத்துக்கு ஆயிரம் பரிசோதனைகளை எடுத்து உடனடியாக துல்லியமான தரத்தில் முடிவுகளை அறிவிக்கும் திறனைக் கொண்டது இந்த ஆய்வு மய்யம்.

இந்த பகுப்பாய்வு மய்யத்தை ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், கருப்பை சிகிச்சை மையக் குழுவின் தலைவருமான டாக்டர் ஆஷா ராவ் தொடங்கி வைத்தார்.

இம்யூனோ லிஸ்டர் மெட்ரோ பாலிஸ் நிறுவனம் 300 வகையான பரிசோதனைகளை அளிக்கவுள் ளது. நோய் தீவிரமாகாமல் முன்பே கண்டறிவது, நோயின் தன்மையை ஆராய்வது, பரிசோதனைகள் மூலம் நோயை உறுதி செய்வது, நோயின் தீவிரத்தை கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பரிசோத னைகள் பகுப்பாய்வு மையத்தில் மேற்கொள்ளப்படும்.

புதிய பகுப்பாய்வு மய்யம்

திறப்பு நிகழ்வில் இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி  விஜேந்தர் சிங் பேசியது:

தமிழ்நாட்டின் மிக முக்கிய சந்தைகளில் கோயம்புத்தூரும் ஒன் றாகும். புதிய பகுப்பாய்வு மய்யத் தைத் தொடங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நோயாளிகளுக்கு மிகச் சிறந்த நம்பகத்தன்மையுடன் சேவை ஆற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்தச் சேவையுடன் மிகச்சிறந்த சுகாதார ஆதரவையும் அளிக்கிறோம் என்றார்.

மாநகராட்சியானது  தாம்பரம்

சென்னை,நவ.5- சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான அவசர சட்டம் நேற்று (4.11.2021) அரசித ழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாம்பரம் மாநக ராட்சியாக்கப்பட்ட சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம் பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன் காரணை மற்றும் திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும், 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி யாக தரம் உயர்த்துவதாக, அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலுள்ள மாநகராட்சிகளில் 20ஆவது மாநகராட்சியாக தாம்பரம் உள்ளது.

 

 

No comments:

Post a Comment