ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அய்யாவுக்கு அரசு மரியாதை அளித்தவர் மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அய்யாவுக்கு அரசு மரியாதை அளித்தவர் மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர்

நெஞ்சில் முள்ளோடு பெரியாரைப் புதைத்துவிட்டோமே என்று வேதனைப்பட்டார் - இன்று அதுவும் நிறைவேறிவிட்டது!

 திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

திண்டுக்கல் நவ.5  ‘‘ஆட்சியே போனாலும் பரவா யில்லை என்று அய்யாவுக்கு அரசு மரியாதை அளித் தவர் மானமிகு முத்தமிழறிஞர் கலைஞர், நெஞ்சில் முள்ளோடு பெரியாரைப் புதைத்துவிட்டோமே என்று வேதனைப்பட்டார்'' - இன்று  அதுவும் நிறைவேறிவிட்டது! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உரிமைகளுக்காக இருக்கின்ற இயக்கம்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு சொத்துரிமை - இது திராவிட இயக்கத் தினுடைய அருட்கொடை - உரிமைக்கொடை. உரிமை களுக்காக இருக்கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைக்கு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமன ஆணை.

இங்கே சொன்னார்களே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ‘‘தந்தை பெரியார் அவர்கள் மறைந் ததும், அவருக்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்வதற்கு உத்தரவிட்டேன். ஆனால், சில முக்கியமான அதிகாரிகள் அதுபோன்று செய்ய முடியாது; பெரியார் அவர்கள் அரசு பதவி வகிக்கவில்லை என்றார்கள்.

என்னுடைய ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்றார் கலைஞர்

காந்தியாருக்கு அரசு மரியாதை கொடுக்கப் பட்டதே, அவர் எந்த அரசுப் பதவியில் இருந்தார்? இதனால் என்னுடைய ஆட்சியே போனாலும் பரவாயில்லை, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுக்கவேண்டும்'' என்று அந்த அதிகாரிகளிடம் கூறி, அதில் உறுதியாக இருந்து, அதை நிறைவேற்றினார்.

ஆனால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை - பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கவில்லை என்று வருத்தப்பட்டார்.

இப்பொழுதுகூட ஒரு பெரிய கருத்து பரவலாக இருக் கிறது. ஆட்சி நம்மிடம் வந்தாயிற்று. ஆனால், இன்னமும் அதிகாரிகள் பல பேர் மாறியதாகத் தெரியவில்லை.

‘‘வாங்கிப் பழகிய கை; சொல்லிப் பழகிய பொய்'' இவையெல்லாம் அரித்துக் கொண்டே இருக்கும்போல இருக்கிறது.

அதையெல்லாம் ஒரு கை பார்க்கின்ற முதலமைச் சர்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இது பழைய காலத்து வழியில்லை - எங்கெங்கு ஊழல், எங்கெங்கு கோணல் என்பதையெல்லாம் தேடுகிறார்கள்.

இதற்கு முன்பு, வடிவேல் காமெடியில்தான் வந்தது கிணற்றைக் காணோம் என்று. இப்பொழுது நிலக்கரி யையே காணவில்லை என்கிறார்கள்.

ஆகவே, இந்த சூழலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம் உண்டு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை ஆட்சிப் பொறுப் பேற்ற 100 நாள்களுக்குள் எடுப்பேன் என்று சொல்லி, அதை எடுத்துக்காட்டி, அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் பணி நியமன ஆணையை வழங்கினார். பெண்கள் உள்பட ஓதுவாராக பணி நியமனம் செய்த ஆட்சி இன்றைய ஆட்சியாகும்.

காலங்காலமாக இருந்த

சனாதனக் கோட்டை சரிந்தது

இந்த அமைச்சர்களை நாம் மனதாரப் பாராட்ட வேண்டும். ஜாதி ஒழிப்பிற்கு என முனைப்பான செயல்களைச் செய்து யார் இதுவரை ஆட்சி செய்திருக்கிறார்கள்?

ஏதோ பத்து அர்ச்சகர்களுக்கு வேலை என்று தயவு செய்து மேலெழுந்தவாரியாக நினைத்து விடாதீர்கள். காலங்காலமாக இருந்த அந்த சனாதனக் கோட்டை சரிந்தது.

‘‘பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்'' என்று புரட்சிக்கவிஞர் சொன்னார் பாருங்கள்,

அதை இடித்த கடப்பாரைதான் எங்கள் முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள். அவர் கையைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள்தான் நம்முடைய அமைச்சரைப் போன்றவர்கள்.

சனாதனிகள் துடிக்கிறார்கள் இப்பொழுது - ஆகம விதி என்னாவது? என்று சொல்கிறார்கள்.

ஆகமம் தெரியாதவர்கள் எல்லாம் பல பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே!

எந்த ஆட்சியும் இப்படி கருணை காட்டியது கிடையாது

முதலமைச்சரின் கருணை உள்ளத்தாலும், அமைச் சர்களின் கருணை உள்ளத்தாலும், இருந்துவிட்டுப் போகட்டும்; பரவாயில்லை, புதிதாக ஆட்களை சேர்க்கலாம். பழைய ஆட்கள் கருணை அடிப்படையில் இருக்கட்டும் என்று கருணை காட்டுகின்ற ஆட்சி இந்த ஆட்சிதான். வேறு எந்த ஆட்சியும் இப்படி கருணை காட்டியது கிடையாது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவே, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிற்கு இதுதான் அஸ்திவாரம்.

இங்கே உரையாற்றிய வா.நேரு, பாலபாரதி ஆகியோர் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

ஜாதிப் பட்டத்தைப் போடக்கூடாது என்று 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு முதல் மாகாண மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

டபிள்யூபிஏ சவுந்திரபாண்டியன் நாடார் என்ற பெயரை இனிமேல் டபிள்யூபிஏ சவுந்திரபாண்டியனார் - பட்டிவீரன் பட்டி - அச்சம் அகற்றிய அண்ணல். அப்படிப்பட்டவர் அதைச் சொன்னார்.

தமிழ்நாட்டில், ஜாதிக் கட்சிக்காரனே,

ஜாதிப் பட்டம் போடுவது கிடையாது

அன்றையிலிருந்து ஜாதிப் பட்டம் கிடையாது - தமிழ் நாட்டில், ஜாதிக் கட்சிக்காரனே, ஜாதிப் பட்டம் போடுவது கிடையாது - அதுதான் பெரியாருடைய சாதனை.

வடநாட்டில் எல்லா தலைவர்களும் ஜாதிப் பட்டத் தைப் போட்டுக் கொள்கிறார்கள். சகோதரி என்னை மன்னிக்கவேண்டும் - கம்யூனிஸ்ட் தலைவர்கள்கூட அந்தந்த பகுதிகளில், அந்தந்த ஜாதிப்பட்டத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே அந்தப் பேச்சே கிடையாது. இப்பொழுது மறுபடியும் பழைய கதை திரும்புவதுபோன்று, புதிது புதிதாக ஜாதிப் பட்டம் போடலாம் என்று நினைத்தால், இது ஒரு கண்ணிவெடி.

உடனே கேட்கிறார்கள், சரிங்க, நீங்க ஏன் இட ஒதுக்கீட்டில் ஜாதி வேண்டும் என்று கேட்கிறீர்கள்? மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஜாதி வேண் டும் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

அதற்கு ஒரே ஒரு பதில்தான், நாங்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது - பெரியாருடைய ஜாதி ஒழிப்பு என்பது - அதனுடைய வேரையே அழிப்பது.

மலேரியாவிற்குக் காரணமான கொசு எங்கே உற் பத்தி ஆகிறதோ, அதை அங்கேயே அழிக்கவேண்டும் என்பதுதான் பெரியாருடைய கருத்து.

கொசுவத்தி, கொசு வலை விற்பவர்களுக்கு

கொசு இருந்தால்தான் வியாபாரம்!

ஆனால், சில பேர் என்ன சொல்கிறார்கள்; நாங்களும் ஜாதியை ஒழிக்கத்தான் வந்திருக்கிறோம் என்று சொல்லி, கொசுவத்தியை விற்கிறான்.

கொசுவத்தி விற்கிறவனுக்கு, கொசு இருந்தால்தான் வியாபாரம் ஆகும். ஆகவே, அவன் உண்மையாகவே கொசுவை ஒழிப்பவன் கிடையாது.

ஆக, கொசுவத்தி விற்பவனும் சரி, கொசு வலை விற்பவனும் சரி கொசு இருந்தால்தான் அவர்களுக்கு வியாபாரம் நடைபெறும்.

மருந்துக் கடையில், ஆன்ட்டிபயாடிக் மருந்தை வாங்கும்பொழுது, அதில் அந்த மருந்து தயாரிக்கப்பட்ட விவரம் போட்டிருக்கும். அதில், விஷமும் இருக்கிறது என்று போட்டிருக்கும்.

என்னங்க, மருந்து கேட்டால், விஷத்தை தரு கிறீர்களே என்று கேட்டால்,

கிருமிகளைக் கொல்வதற்காக, மிகக் குறைவான அளவிற்கு விஷம் சேர்ப்பார்கள். அப்பொழுதுதான் அந்தக் கிருமியை கொல்ல முடியும்.

உடனே அதைப் பார்த்துவிட்டு, சரி, நீங்கள்தான் மருந்தில் விஷம் வைத்திருக்கிறீர்களே, நான் நேரிடை யாகவே விஷத்தை சாப்பிடுகிறேன் என்றால், என் னாகும்?

அதுபோன்றதுதான், இன்றைக்கு ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்கிறவர்களுக்கும், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆன்ட்டிபயாடிக் என்பதில் விஷத்தை குறைவாக வைத்திருக்கிறோம்.

ஒரே ஜாதி என்று சொல்லுங்கள் நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேசன் கார்டு என்று சொல்கிறீர்களே, ஒரே ஜாதி என்று சொல்லுங்கள், நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோமா, இல்லையா என்று பாருங்கள்.

ஆகவே, நண்பர்களே நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்த ஜாதி காரணமாகத்தானே  நம் பிள்ளைகளை படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

இன்றைக்குக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுதான் புதிய வடிவில் நீட் என்ற பெயரில் வந்திருக்கிறது.

இந்த இயக்கம் இல்லை என்றால், நம்முடைய பிள்ளைகள் படித்திருக்க முடியுமா?

டாக்டர் நேரு - முனைவர் நேரு - பிஎச்.டி. படித்தி ருக்கிறார் - அதேபோன்று நம்.சீனிவாசன். என்னைப் போன்றவர்கள் வழக்குரைஞர் ஆகியிருக்கிறோம்.

நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சிதான்திராவிடர் இயக்கம்

பெரியார் இல்லை என்றால், திராவிட இயக்கம் இல்லை என்றால், நம்முடைய முதலமைச்சர் சொன்னாரே, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சிதான் - திராவிடர் இயக்கம் என்று.

நூறாண்டுகளுக்கு முன்பு இந்த இயக்க ஆட்சி வரவில்லை என்றால், நம் தோள்மீது துண்டு போட முடியுமா? முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்ட முடியுமா?

ஒரு காலத்தில் பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாரும் வழக்குரைஞர் ஆக முடியாது.

நம்முடைய அமைச்சர் இங்கே பேசும்போது சொன்னாரே -அய்..எஸ்., அய்.பி.,எஸ். அதிகாரிகள் பெரியாருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்; மாதவன் சட்ட அமைச்சராக இருக்கிறார்.

பெரியாருக்குப் பாராட்டு - ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து பெரியாருக்கு நன்றி செலுத்த அந்தக் கூட்டத்தை நடத்தினார்கள்.

சென்னை ராஜேசுவரி திருமண மண்டபத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது,

‘‘நீங்கள் உங்கள் தகுதி அடிப்படையில் பதவிக்கு வந்திருக்கிறீர்கள். நான் ஏதோ செய்திருக்கலாம்; ஆனால், நீங்கள் பதவிக்கு வந்திருக்கிறீர்கள், அதனால் மகிழ்ச்சி அடைவது சரி. ஆனால், என்னுடைய சிந்தனை உயர்நீதிமன்றத்தை நோக்கிப் போயிற்று.

நூறு ஆண்டு வரலாற்றில், உயர்நீதிமன்றத்தில், தாழ்த்தப்பட்ட எங்களுடைய சகோதரன், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் என்கிற காரணத்திற்காக, நீதிபதியாக வர முடியவில்லையே - அதை இந்த ஆட்சி தான் செய்யும் - கலைஞர் செய்வார் - அதில் நியாயம் இருக்கிறது - சமூகநீதி அதுதான்'' என்றார்.

கூட்டம் முடிந்ததும், இதுகுறித்துவிடுதலையில் தலையங்கம் எழுதுங்கள் என்றார் என்னிடம்.

கலைஞர் அவர்கள் மாலையில் விடுதலையைத்தான் முதலில் படிப்பார்.

விடுதலையின் தலையங்கமும்கலைஞரின் செயலும்!

விடுதலையில் தலையங்கம் வந்தவுடன், அதனைப் படித்துப் பார்த்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சட்ட அமைச்சரை உடனே அழைத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மாவட்ட நீதிபதிகளில் 2 ஆம் இடத்தில்தான் ஒருவர் இருக்கிறார் என்று முதலமைச்சர் கலைஞரிடம் சொன்னார் சட்ட அமைச்சர்.

பரவாயில்லை, அவருக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்; நேரிடையாக டில்லிக்குச் செல்லுங்கள் என்றார்.

ஒரு வார காலத்திற்குள்ளாக தேடிக் கண்டுபிடித் தார்கள் - தலைமை நீதிபதியாக வீராசாமி அவர்கள் இருந்தார், நல்ல வாய்ப்பாக.

மாநிலத்தில் முதலமைச்சரின் ஒப்புதல் வேண்டும்; மத்தியில் உள்துறை அமைச்சரின் ஒப்புதல் இருந்தால்தான் நீதிபதிகளின் நியமனங்கள் நடைபெறும்.

தென்னார்க்காட்டில், மாவட்ட நீதிபதியாக உள்ள வரதராஜன், முதன் முறையாக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்தது.

எனக்கா அந்தப் பதவி? என்று வியப்புடன் கேட்டார் வரதராஜன்!

இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும், எல்லோ ருக்கும் அதிர்ச்சி. எல்லோருக்கும் அதிர்ச்சி என்பதை விட, யாருக்குப் பதவி கிடைத்ததோ, அவருக்கே அதிர்ச்சி!

நான் 2 ஆம் இடத்தில்தானே இருக்கிறேன். எனக்கா அந்தப் பதவி? என்று வியப்புடன் கேட்டார்.

உங்களை அழைத்திருக்கிறார்கள், 'நீங்கள் உடனே சென்னைக்குப் போங்கள் என்று சொன்னார்கள்.

வரதராஜன் யார் என்று முதலமைச்சர் கலைஞருக் கும் தெரியாது; தந்தை பெரியாருக்கும் தெரியாது. அங்கே கொள்கைதான் வென்றதே தவிர, தனி நபர் வெற்றியல்ல - இதுதான் திராவிட இயக்கம்.

ஏன் கலைஞரை வரலாற்றிலிருந்து ஒழிக்க வேண்டும்; தி.மு.. ஆட்சி ஒழியவேண்டும் என்று இன்னமும் வேண்டிக்கொள்கிறார்கள் அவர்கள் - இன்னமும் ஏன் அர்ச்சனை செய்கிறார்கள்? ஒரு பெரிய மேதை சொல்கிறாரே, ‘கருணாநிதியைவிட மு..ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர்என்று.

யாருக்கு ஆபத்தானவர் முதலமைச்சர்?

இதுதான் எங்கள் முதலமைச்சருக்கு ஒரு நல்ல சர்டி பிகேட் இதைவிட வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?

அவரை நல்லவர் என்று சொன்னால்தான், நாங்கள் எல்லாம் ஆச்சரியப்படவேண்டும். சந்தேகப் படவேண்டும்.

அவர் யாருக்கு ஆபத்தானவர்?

ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு ஆபத்தான வர் - அநீதியை வைத்துப் பிழைப்பவர்களுக்கு ஆபத்தானவர். கண்ணிவெடிகளுக்கு ஆபத்தானவர்.

வழக்குரைஞர்களுக்கு ஓய்வு என்பதே கிடை யாது. நானும் கூட வழக்குரைஞர் என்ற முறையில் சொல்கிறேன். சில வழக்குரைஞர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட செல்லுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்கிறார் வரதராஜன் அவர்கள்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியைப் பார்த்து , மை லார்ட்!" என்றனர்!

அய்யங்கார் வழக்குரைஞர், அய்யர் வழக்குரைஞர், ஆச்சாரியார் பிரபல மூத்த வழக்குரைஞர்கள் எல்லாம், நீதிபதி வரதராஜன் அவர்கள் வந்ததும், இவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள்; அவரும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்கிறார்

வழக்கு விசாரணையின் போது, அய்யங்கார் வழக்குரைஞர், ", மை லார்ட்!” என்கிறார்.

இந்த வார்த்தையைச் சொல்லும்பொழுது, அவன் மனப்பூர்வமாகவா சொல்லியிருப்பார்?

கருணாநிதி ஒழிக, பெரியார் ஒழிக என்று சொன் னவன், ', மைலாட்' என்று அவர்கள் சொல்ல வைத்துவிட்டார்களே, சூத்திர ஆட்சி வந்துவிட்டதே என்பதுதான் அவர்களுடைய கவலை.

இன்றைக்கும் அதுதான் போராட்டம் - இதுதான், நீட் தேர்வினுடைய மற்றொரு உருவம். இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

(தொடரும்)

No comments:

Post a Comment