விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு: தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு: தமிழ்நாடு அரசு

சென்னை, நவ.28 விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பரிசு வழங்கும் திட்டம்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களை மீட்டு பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக் குவிக்கும் பொருட்டு இந்திய அர சின் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் களை மீட்டு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு

ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

ரூ.5 ஆயிரம் பரிசு

இத்திட்டத்தின் முக்கிய நோக்க மானது சாலை விபத்தில் பாதிக்கப் பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பது ஆகும்.

 ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ் விடத் தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவ மனைக்கு தகவல் தெரிவிப்பர்.

அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட அளவி

லான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும்.

இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5 ஆயிரம் பரிசு தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment