தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, நவ.28 குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை தலைமைச் செயல கத்தில், பாலியல் குற்றங்களி லிருந்து குழந்தைகளைப் பாது காக்கும் (போக்சோ) சட்டம், 2012இன் செயல் பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் குழந்தை களுக்கெதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து எடுத்து வருகின்ற நடவடிக் கைகள் குறித்து இக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட் டது.
மேலும், போக்சோ சட்டம் செயல்பாடு குறித்து தமிழகம் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு புள்ளி விவரங்கள், போக்சோ சட்டப்படி புகார் பதிவு செய்வது மிகவும் எளி மையாக்குதல், இச்சட்டத்தில் பல்வேறு விதமான பாலியல் குற்றச்செயல்கள் வரையறுக்கப் பட்டபடி அனைத்து குற்றங் களையும் சம நோக்குடன் தீவிரமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுதல் ஆகியன குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
ரூ.5 கோடி ஒதுக்கீடு
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி இதுவரை 148 குழந்தைகளுக்கு ரூ.1,99,95,000 முதற்கட்டமாக வழங்கியுள்ளது குறித்தும், அடுத்தக்கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இழப்பீடுகள் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவு றுத்தினார்.
தடயவியல் ஆய்வு அறிக் கைகள் விரைந்து கிடைக்க ஏதுவாக அதற்கான தடயவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை மற்றும் இதர உள்கட்டமைப்பு கள் கூடுதலாக அமைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்
தினார்.
நடமாடும் விசாரணை பிரிவு
பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொலைதூர இடங்களுக்கு சென்று விசா ரணை செய்ய நடமாடும் விசா ரணை பிரிவு (காவல் வாகனம்) செயல்பட்டு உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், சென்னையில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுவரை 3,672 குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்புடைய கணினி தகவல்கள் பெறப்பட்டு, இதுவரை 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 191 விசாரணைக்கு தகுதியான மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, மேல் நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டு வரு வது குறித்தும் இக்கூட்டத் தில் விவாதிக்கப்பட்டது.
24 மணி நேர கல்வி தகவல் மய்யம்
24 மணி நேரமும் செயல் படக்கூடிய கல்வி தகவல் மய்யத்தின் (14417) மூலம் உள வியல் பயிற்சி பெற்ற நிபுணர் களைக்கொண்டு மாணவர் களுக்கு ஆலோசணை வழங்கும் மய்யமாக செயல்பட்டு வரு கிறது.
அதேபோன்று, ஒவ் வொரு வகுப்பறையிலும் 1098 சிறார் உதவி எண் குறித்த விவ ரங்கள் ஒட்டப்பட்டு, வரும் கல்வி ஆண்டிலிருந்து இவ்விவ ரங்கள் அனைத்து பாடப் புத்தகங் களிலும் அச்சிடப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற் றும் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முதல மைச்சர் ஸ்டாலின் அறிவுறுத் தினார்.
No comments:
Post a Comment