மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகை ரூ.6 ஆயிரமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகை ரூ.6 ஆயிரமாக உயர்வு

சென்னை, நவ. 2- தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப் பதாவது:-

தமிழ்நாடு அரசு மீன் பிடி குறைவுகால நிவா ரணத்தொகையாக மீன வக் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது.

மீனவர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப் படும் என்ற தேர்தல் வாக் குறுதியை முதல்-அமைச் சர் அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் இந்த ஆண்டில் இருந்து மீன வர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகையை குடும்பம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த திட்டத்தில் 6 ஆயிரம் மீனவக் குடும்பங் கள் கூடுதலாக சேர்க் கப்பட்டுள்ளன. அதன் படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங் களில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும் பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.108 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத்தொகை யாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள் ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ.74.40 கோடி, பயனாளி களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப் படும்.

மேலும், கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவார ணத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 11 கட லோர மாவட்டங்களில் உள்ள 1.48 லட்சம் கடல் மீனவர்களுக்கு நிவார ணத்தொகை பயனாளிக ளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப் படும்.

கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவா ரணத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2.09 லட்சம் மீனவ மகளி ருக்கு அவர்கள் செலுத் திய சந்தா பங்குத்தொகை ரூ.1,500 உடன் அரசு நிவா ரணத்தொகை ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4,500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

மேலும் மீன்பிடி குறைவுகால நிவாரணம் மற்றும் சேமிப்பு மற்றும் நிவாரணத்தொகைகள், கன்னியாகுமரி, தூத்துக் குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மீன்பிடி குறைவுகாலமாக அனுசரிக்கப்படும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மற் றும் ஏப்ரல் மாதங்களில் வழங்கப்படும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment