மாநகராட்சி பள்ளி மாணவர்களை நேசமுடன் வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

மாநகராட்சி பள்ளி மாணவர்களை நேசமுடன் வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ. 2- கரோனா தொற்று பரவல் தணிந்து வருவதையடுத்து தமிழ்நாட்டில் 1 முதல் 8-ம் வகுப்புகள் நேற்று (1.11.2021) முதல் மீண்டும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்களை சிறப்பு விருந்தினர்களை வர வேற்பது போன்று வர வேற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு..ஸ்டா லின் சென்னை வேளச் சேரியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துவிட்டு நேற்று (1.11.2021) காலை கிண்டி வழியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர், கிண்டி மடுவங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கூடத்துக்கு திடீரென்று வருகை தந்தார். முதல மைச்சர் மு..ஸ்டாலி னுக்கு ஆசிரியைகள் புத்த கம் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மு..ஸ்டாலின் பள்ளி வகுப்பறைக்கு சென்றார். அவருக்கு மாணவ-, மாண விகள் எழுந்து இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் மாணவ, -மாணவிகளுக்குசாக் லேட்மற்றும் நோட்டு, பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்களை வழங்கி அன்புடன் வர வேற்றார்.

பின்னர் அவர் வாஞ்சையுடன் பள்ளி மாணவ-, மாணவிகளின் பெயர் களை நேரடியாக கேட் டறிந்து, கல்வியில் தீவிர கவனம் செலுத்த வேண் டும் என்று அறிவுரையும், வாழ்த்துகளும் தெரிவித் தார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறை யாக கடைப் பிடிக்கப் படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். கரோனா வழி காட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறி வுரை கூறினார்.

No comments:

Post a Comment