அரசின் பணம் பயனாளிகளுக்கு சரியாக சென்றடையும் வகையில் நிதித்துறையில் புதிய விதிமுறை: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

அரசின் பணம் பயனாளிகளுக்கு சரியாக சென்றடையும் வகையில் நிதித்துறையில் புதிய விதிமுறை: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை, நவ. 2- அரசின் பணம் பயனாளிகளுக்கு சரியாக சென் றடையும் வகையில், நிதித் துறையில் புதிய விதிமுறையை கொண்டுவர உள்ளதாக நிதிய மைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை தலைமை செய லகத்தில் நேற்று (1.11.2021) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வரவு செலவுத் திட்ட உரை 2021-2022இல் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: கருவூல அமைப்புகளின் கண் காணிப்புக்கு வெளியேயுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவ தாகப் பல்வேறு தரவுகள் சுட் டிக்காட்டுகின்றன. இதை கண் டறிய இரட்டைக் கணக்கெ டுப்பு முறை ஒன்று தொடங் கப்பட்டது. 

சிறப்பு பணிக்குழு

இந்த கணக்குகளை சரி செய்ய நிதித்துறையின் மூத்த அதிகாரியின் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழுவை அரசு அமைக் கும். அரசுத்துறைகள், அரசால் நடத்தப்பெறும் சங்கங்கள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் கருவூலத்திற்கு வெளியே இருப் பில் வைக்கப்பட்டிருந்த நிதி யைக் குறிப்பிட்ட காலவரை யறைக்குள் கண்டறியவும் பிறகு சரிபார்த்து அவற்றை அரசுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. முடிவுற்ற திட்டங்கள், நடப்புத் திட்டங் கள் மற்றும் துறையின் வருவாயினங்கள் ஆகிய ஒவ்வொன் றின் கீழும் தனித்தனியாக செய் யப்பட்டுள்ளது.

கால நீட்டிப்பு

இத்தகைய முறையைக் கையாண்டு, இதுவரை திரட் டப்பட்ட தரவுகளைக் கொண்டு சிறப்புக் குழுவானது அரசுக் கணக்கில் உடனடியாக திருப் பிச் செலுத்தத்தக்கதாக ரூ.1946.31 கோடியை இனம் கண்டுள்ளது. இதன்மூலம் அரசுக் கருவூலத் தில் செலுத்திட தக்க, பயன் படுத்தப்படாத கூடுதல் நிதி களையும் கண்டறிவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது.  இப்பணியை மேற்கொள்ள சிறப்புக்குழுவுக்கு மார்ச் 31, 2022 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. வழங்கப் பட்ட நிதி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பயன்படுத்தப் படா விட்டால், அவை அப்ப டியே முழுமையாக அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.

பயிர்கடனில் குளறுபடிகள்

அரசிடம் உள்ள தகவல் களை தீட்டி ஒன்றிணைத்ததன் மூலம் பயிர்கடனில் உள்ள குளறுபடிகள் தெரியவந்தது. நகைக்கடன் தள்ளுபடியில் பல தகவல்கள் பெறப்பட்டு தவறான முறையில் கடன் பெற்றவர்களுக்கு செல்லவேண் டிய பணம் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு பதிவை வைத்து ஆய்வு செய்யும் போது பலர் மறைந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம் இன்னும் சென்றுகொண்டே இருக்கி றார்கள். மறைந்தவர்கள் பெய ரில் இலவச அரிசியும் சென்று கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற அனைத்து பிரச்சி னைகளுக்கும், இந்த புதிய அணுகுமுறையின் மூலமாக  திறம்பட தீர்வு காணப்படும். 

பிழைகளைக் குறைத்து, தேவையில்லாத செலவுகளைக்  குறைக்க அரசு தொடர்ந்து பாடுபடும். நிதியை வீணாக செலவு செய்யக்கூடாது. தவ றான நபர்களுக்கு திட்டங்க ளும், பணமும் செல்வது தடுக் கப்பட்டுள்ளது. எனவே, முதல மைச்சரின் உத்தரவை பெற்று  இந்த ஆண்டில் இருந்து நிதித் துறையில் ஒரு புது விதி முறையை கொண்டுவர இருக் கிறோம். வாரியமோ அல்லது அரசு துறையோ எதாவது ஒரு காரணத்திற்காக பணத்தை பெற வேண்டும் என்றால் நிதித் துறையின் ஒப்புதல் இல்லாமல் பெற முடியாது என்ற விதி முறையை கொண்டுவர இருக் கிறோம்.  இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment