சென்னை, நவ. 2- வங்கக் கட லில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகு தியால் சென்னை உள்பட தமிழ்நாட்டில் அநேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது குமரிக்கடல் மற்றும் இலங்கையை யொட்டி நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியாக நகரக் கூடும் என்றும், அதைத்தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கன் னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட் டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் படி அந்த மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
No comments:
Post a Comment