திருவனந்தபுரம், நவ. 29 ஒமிக்ரான் வைரஸ் பர வலை தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து கேரள வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். தென்னாப் பிரிக்காவில் உருமாறிய ‘ஒமிக்ரான் வைரஸ்’ பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதையடுத்து வெளிநாடு களில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுக ளுக்கு ஒன்றிய அரசு உத் தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச் சர் வீணா ஜார்ஜ் கூறியதா வது: ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து ஒன் றிய அரசு, மாநில அரசுக ளுக்கு பொதுவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடவில்லை. ஆனா லும் இங்கிலாந்து, அய் ரோப்பிய நாடுகள், இஸ் ரேல், ஹாங்காங், தென் னாப்பிரிக்கா, போர்ட்ஸ் வானா, பிரேசில், வங்காள தேசம், சீனா, மொரிசீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடு களில் இருந்து இந்தியா வரும் பயணிகளை மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வெளி நாடுகளில் இருந்து கேரளா வுக்கு வருபவர்கள் 7 நாள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அங்கி ருந்து வருபவர்களில் 5 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். கேரளா வுக்கு வந்த பிறகும் விமான நிலையத்தில் பரிசோ தனை நடத்த வேண்டும். தொடர்ந்து 7 நாள் தனிமை காலம் முடித்த பின்னரும் மீண்டும் ஆர் டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment