வேலூர், நவ. 30- குடியாத் தம் அருகே நேற்று முன் தினம் (28.11.2021) ஒரே நாள் இரவில் 7 முறை நில நடுக்கம் ஏற் பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லைமேடு கிராம பகுதியில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிர வில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அதிகாலை 2.30 மணியளவில் தட்டப் பாறை மீனூர் கொல்லை மேடு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள் ளது. இதில் கட்டடங்கள் அதிர்ந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
நிலநடுக்கம் நின்ற நிலையில், பின்னர் சில வினாடிகளுக்கு பின் மீண்டும், மீண்டும் என 7 முறை நிலநடுக்கம் ஏற்பட் டது.
அப்போது சத்தத்து டன் நிலநடுக்கம் இருந்த தாக கிராம மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் நின்ற பின்னர் பொது மக்கள் தங்கள் வீடுகளை பார்த்தபோது பல வீடு களில் பெரிய அளவு விரி சல்கள் ஏற்பட்டு இருந் தன. 5 வீடுகளில் விரிசல் கள் இருந்தன.
No comments:
Post a Comment