நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க முதலமைச்சர் நடவடிக்கை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க முதலமைச்சர் நடவடிக்கை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதி

திருவள்ளூர், நவ. 30- தமிழ் நாடு நீதிமன்றங்களில் தமிழைவழக்காடு மொழி யாக கொண்டுவருவதற்கு முதலமைச்சர் மு..ஸ்டா லின் நடவடிக்கை எடுத்து வருகிறார்என்று சட்டத் துறை அமைச்சர்எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று (29.11.2021) நடை பெற்றது. இதில், தமிழ் நாடு சட்டம், நீதி மன்றங் கள், சிறைச்சாலை மற் றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக பங் கேற்று 506 மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல், 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு மற் றும் கட்டுரை போட்டி களில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாட் டில் சட்டக்கல்வி அளிக் கும் வகையில் சென்னை அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு, 130 ஆண்டுகள் ஆகின்றன. உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சட்ட பேராசிரியர்கள், சட்ட வல்லுநர்களை உரு வாக்கிய பெருமை இச்சட் டக் கல்லூரியை சாரும்.

டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1990இல் டாக் டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என பெயர் சூட்டிய பெருமை யும், இந்திய அளவில் தமிழ்நாட்டில் 1997இல் முதன்முதலில் சட்டப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமையும், தமிழில் சட்டப் படிப்பை கொண்டு வந்த பெருமை யும் மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறி ஞர் கலைஞரைச் சாரும்.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதே சம் உள்ளிட்ட மாநிலங் களில் அந்தந்த தாய்மொ ழியே வழக்காடு மொழி யாக இருந்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட் டிலும் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழி யாக கொண்டுவர, தமிழ் நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உரிய நட வடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

இன்று பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் கற்ற சட்ட அறிவை சரி யான முறையில் பயன் படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment