சென்னை,நவ.5 தமிழ்நாட்டில் 14.11.2021 அன்று 8ஆ-வது கரோனா தடுப்பூசி முகாம் நடை பெற உள்ளது
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப் பூசி போடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தடுப் பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது.
அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக மாவட்டங்களில் பல இடங்களில் கூடுதலாக மய்யங்கள் அமைத்து மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இதுவரை நடைபெற்ற 7 சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 51 லட் சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது.
அந்த வகையில், வரும் 14-ஆம் தேதி 8-ஆவது கரோனா தடுப்பூசி முகாம் நடை பெற உள்ளது. சுமார் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. 2ஆ-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து 8 வாரமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றா லும், இன்னும் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண் ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் வீடு களுக்கே தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது என மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment