தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, நவ.5 தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் நிலையில் மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட் டங்களிலும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பெண் ணாடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்குள்ள பெலாந்துறை நீர்த்தேக்கத்தில் நீர்நிரம்பி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த மாவட் டத்தில் தொடர்ந்து 5ஆவது நாளாக பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

தர்மபுரி மாவட்டம் ஒகே னக்கல் அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வ ராயன் மலைப்பகுதியில் தொடர் மழையால் கோமுகி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 5 நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதல் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் செய்யாறு வந்தவாசி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. செங்கல்பட்டு மாவட்டத் தில் பாலாற்றின் தடுப்பணை நிரம்பியதால் உபரிநீர் கடலில் திறந்துவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் கூறியுள் ளதாவது:

‘’லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் தென் தமிழ்நாட்டையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற் சியும் நிலவுகிறது. இதன் காரண மாக டெல்டா, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கோவை, நீலகிரி மற்றும் உள் ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் கனமழை தொடர வாய்ப்பு. சென்னையில் மிதமான தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது.

மூன்று நாட்களுக்கு கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment