கடத்தப்பட்ட 'கடவுளர்' சிலை மீட்பு
புதுடில்லி,நவ.5- நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி 'கடவுளர்' சிலை தற்போது மீட்கப் பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி என்று அழைக்கப்படும் வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதன் கோயிலிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூரணி சிலை வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாம். தற்பொழுது அந்த சிலை கனடாவின் ஒட்டாவா நகரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அண்மையில் இந்திய தொல்பொருள் ஆராய்ச் சித் துறையினர் (ஏஎஸ்அய்) பெற்றனர்.
இதுகுறித்து ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறியதாவது:
இந்த சிலை கடந்த மாதம் 15.9.2021 அன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சிலையை மீட்டெடுத்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். இதன்படி, திருடப்பட்டு கடத்தப்பட்ட இந்த சிலை மீட்டெடுக்கப் பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 1913ஆம் ஆண்டு இந்த சிலை கடத்தப்பட்டது. 1976ஆம்ஆண்டு முதல் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்ட 55 சிலைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வரும் 11ஆம் தேதி இந்த சிலை அலிகர் நகருக்கும், பின்னர் நவம்பர் 14-இல் கன்னவுஜ், அயோத்யாவுக்கும், 15இல் வாரணாசிக்கும் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் தேர்வு
சென்னை,நவ.5- தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2020ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமையேற்றத்துக்கான தேசிய விருதுக்கு (National Award for the Empowerment of persons with Disabilities) தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த பணியாளர், சுயதொழில்புரியும் மாற்றுத் திறனாளி வகையில், பார்வைத் திறன் குறைபாடு உடை யவர் பிரிவில் சென்னைவேளச்சேரி ஏ.எம்.வேங் கடகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்டம் எஸ்.ஏழுமலை, அறிவுசார் குறைபாடு உடையவர் பிரிவில் காஞ்சிபுரம் கானாத்தூர் ரெட்டிக்குப்பம் கே.தினேஷ், பல்வகை குறைபாடு உடையவர் பிரிவில் திருச்சி மாவட்டம் மானக்சா தண்டபாணி ஆகியோர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர். சிறந்த சான்றாளர், முன்னுதாரணம் வகை யில், பல்வகைப் பிரிவில் சென்னை மந்தைவெளி கே.ஜோதி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேட் டப்பாளையம் டி.பிரபாகரன் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
கோவேக்சின் தடுப்பூசிக்கு
உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்
ஜெனீவா, நவ.5 கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டு பட்டியலில் உலக சுகா தார அமைப்பு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
கரோனாவுக்கு எதிராக அய்தராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
பன்னாட்டு அளவில் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர உலக சுகாதார அமைப்பு, தனது அவசர பயன்பாட்டு பட்டி யலில் சேர்த்து அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
இந்த அங்கீகாரம் பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருந்தது. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்த உலக சுகாதார அமைப்பு, பாரத் பயோடெக் நிறு வனத்திடம் கூடுதல் தரவுகளை கோரிவந்தது.
இதன்படி, பாரத் பயோடெக் நிறுவனமும் கூடுதல் தரவுகளை அளித்து வந்தது. இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டு பட்டியலில் உலக சுகா தார அமைப்பு சேர்த்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
No comments:
Post a Comment