மும்பை, நவ. 2- மருத்துவ செலவுகளை ஈடு செய்ய காப்பீடு பெற்றிருப்பதோடு, அந்த பாதுகாப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினருக் கான பாதுகாப்பாக மருத்துவ காப்பீடு பாலிசி அமைகிறது. எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க மருத்துவ பாலிசி கைகொடுக்கிறது. மருத்துவ பாலிசி தொடர்பான விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பெருந்தொற்று சூழல் இதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் புரிய வைத்துள்ளது.
அதே நேரத்தில் மருத்துவ சிகிச்சைக் கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், காப்பீடு அளிக்கும் பாதுகாப்பு அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்திருப்பது அவசியம். இதன் மூலம் மருத்துவ அவசர நிலையை சரியாக எதிர்கொள்ளலாம்.
காப்பீடு பெறுபவர்கள், தேவையான பாதுகாப்பை அளிக்கும் வகையிலான பாலிசியை தேர்வு செய்வது அவசியம். பாலிசியின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவமனை வலைப் பின்னல் வசதி உள்ளிட்டவற்றை பரிசீ லித்து, பொருத்தமான பாலிசியை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே பாலிசி பெற்றிருப்பவர்களும் தங்களுக்கான பாது காப்பு போதுமானதாக இருக்கிறதா என் பதை ஆய்வு செய்ய வேண்டும். பாலிசிக் கான ’சம் அஷ்யூர்டு’ தொகை குறைவாக இருந்தால் அதை அதிகரிப்பது நல்லது. பாலிசியை புதுப்பிக்கும் வாய்ப்பை இதற் காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொதுவாக காப்பீடு நிறுவனங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது, பாதுகாப்பு தொகையை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றன.அதிக பாதுகாப்பு தேவை என உணர்ந்தால், பாலிசியை புதுப்பிக்கும் போது, பாதுகாப்பு தொகையை உயர்த்திக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
பாலிசி தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதால், காத்திருப்பு காலம் இல்லா மலே அதிக பாதுகாப்பை பாலிசிதாரர் பெறலாம் என்பது இந்த முறையில் உள்ள அனுகூலமாகும். அதிக பாதுகாப்பிற்காக புதிய பாலிசியை நாடுவதை விட இது ஏற்றதாக இருக்கும். இதே போல ‘சூப்பர் டாப் அப்’ வசதியையும் நாடுவது பொருத் தமாக இருக்கும்.
பாலிசிகளுக்கான சூப்பர் டாப் அப் வசதி, மருத்துவமனை செலவுகள் பாலிசி அளிக்கும் தொகையை விட அதிகமாக இருக்கும் போது கைகொடுக்கும். மருத் துவமனை செலவுகள், பாலிசி தொகையை விட அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்த வசதி அமலுக்கு வரும். ஏற்கெனவே உள்ள காப்பீடு நிறுவனத்திடம் இருந்தே இந்த வசதியை பெறுவது நல்லது. இந்த வசதியின் கீழ், மருத்துவ சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், ஏற்கெனவே உள்ள நோய்கள், குழந்தை கள் நல சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக் கியது.
போதுமான காப்பீடு பெறுவதற்கான மற்றொரு வழி, குடும்பத்தினர் அனைவ ருக்குமான விரிவான காப்பீடு பாலிசியாகும். ஒவ்வொருவருக்குமான தனித் தனி பாலிசி வாங்குவதை விட, குடும்பம் முழுவதற்குமான பாலிசியை வாங்குவது ஏற்றதாக இருக்கும். குடும்ப மருத்துவ காப்பீடு பாலிசியில், ஒரு பிரிமியம் செலுத்தி, அனைத்து பலன்களையும் பெறலாம்.
No comments:
Post a Comment