வாசிங்டன், நவ. 2- உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத் தில் உள்ளது. கரோனா வைரசால் அதிக அள விலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள் ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கரோனா தடுப்பு நடவ டிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் மாடர்னா, பைசர் /பையோ என்டெக் மற்றும் ஜான் சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின் றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 42,06,57,683 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப் பாட்டு மய்யம் தெரிவித் துள்ளது.
இதில் 22,12,21,467 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதா கவும், 19,22,44,927 பேர் தடுப்பூசியின் 2 டோஸ் களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் 3-ஆவது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை சுமார் 1.7 கோடி பேர் இதுவரை செலுத்திக் கொண்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment