அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை
காபூல், நவ. 2- ஆப்கானிஸ்தா னில் தலிபான்கள் தலை மையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்க வில்லை.சீனாவும் பாகிஸ் தானும் மட்டுமே தலி பான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன. மேலும் தலிபான்களுடன் முறையான உறவை ஏற் படுத்துமாறு உலக நாடு களுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.
இந்தநிலையில் ஆப் கானிஸ்தானில் தலிபான் கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உல குக்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக் காவை எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:-
அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக் காமல் இருப்பது தொடர்ந் தால், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும். அது பிராந்தியத்தின் பிரச்சினை. பின்னர், உலக பிரச்சினையாக கூட மாறும். தலிபான் களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லா ததே. போருக்கு காரண மான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம், அரசி யல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம்.
எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்க ளின் உரிமையாகும். போக்குவரத்து உள் கட்டமைப்புக்கு நிதிய ளிப்பதாக தெரிவித் துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தை களுக்கு ஆப்கானிஸ்தா னின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதி யளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment