கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆஸ்திரேலியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆஸ்திரேலியா

சிட்னி, நவ. 2-  ஆஸ்திரேலியா வில் கரோனா தொற்று அதிகரித்த காலத்தில் கடு மையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துவரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக  தளர்த்தப் பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதற் கான தடை நவம்பர் முதல் நீக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வாரம் அறிவித்தார். மேலும் பல தளர்வுகளை யும் அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் 18 மாதங்களுக்கு பிறகு பன்னாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் அறிவித்த தளர்வுகள் மூலம், முழு மையாக தடுப்பூசி செலுத் திக்கொண்ட ஆஸ்திரே லியர்கள் வெளிநாடு செல்ல முடியும்.  வெளி நாட்டிலிருந்து திரும்பிய வுடன் அவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்த தேவையில்லை. தடுப்பூசி போடாதவர்கள் நாட் டிற்குள் வரும்போது 14 நாட்கள் தனிமைப் படுத் திக்கொள்ள வேண்டும்.

நியூசிலாந்து நாட் டிற்கு மக்கள் சென்றுவர அனுமதிக் கப்பட்டுள் ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு ஆலோ சனை நடைபெற்று வரு வதாக ஆஸ்திரேலிய அர சாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment