ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கூட்டணி கட்சி வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கூட்டணி கட்சி வெற்றி

டோக்கியோ, நவ. 2- ஜப்பானில் கடந்த மாத தொடக்கத் தில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்ட புமியோ கிஷிடா, அந்த நாட்டு அரசமைப்பு சட்டத் தின்படி பிரதமராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து தனது தலைமையிலான புதிய அரசு பணியை தொடங்குவதற்கு முன்பு வாக்காளர்களின் ஆணையை பெற விரும்பு வதாக கூறி அதிகாரமிக்க நாடாளுமன்ற கீழவையை கலைத்து, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி 465 இடங் களை கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழு மையாக கடைப்பிடித்து, பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த தேர்தலில் வாக்குப் பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது.

இந்தநிலையில்,  வாக் குகள் எண்ணப்பட்டதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளன. லிபரல் ஜனநாயக கட்சியின் கூட்டணிக் கட்சி 32 இடங்களில் வென்றுள் ளது. தேர்தல் வெற்றி மூலம் புமியோ கிஷிடா, மீண்டும் ஆட்சியை கைப் பற்றியுள்ளார்.  இதன் மூலம் 10ஆவது முறை யாக நாடாளுமன்றத் தேர் தலில் புமியோ  கிஷிடா வெற்றி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment