காபூல், நவ. 2- தலிபான் அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவ ராகவும் உள்ளார். ஆனால் இவர் ஒருபோதும் பொது வெளியில் தோன்றியது கிடையாது. எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது தெரியாமலேயே இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ் தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு கூட ஹைபத்துல்லா அகுந்த்சாதா வெளியில் தலைகாட்ட வில்லை.
அதே வேளையில் தலிபான்கள் தலைமையில் அமை யும் புதிய அரசியல், மதம் மற்றும் ராணுவ விவகாரங்கள் மீதான இறுதி முடிவை எடுக்கும் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக ஹைபத்துல்லா அகுந்த்சாதா இருப்பார் என தலிபான் அமைப்பு அறிவித்தது. முன்னதாக ஹைபத் துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப் பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மை யில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோத லில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முதல் முறையாக தலிபான் தலைவர் ஹைபத் துல்லா அகுந்த்சாதா பொதுவெளியில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஒரு மதரசா பள்ளிக்கூடத்துக்கு சென்று, அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாக தலிபான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைபத்துல்லா அகுந்த்சாதா வருகையையொட்டி அந்த இடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்ததாகவும், காட்சிப்பதிவு மற்றும் ஒளிப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படு கிறது.
No comments:
Post a Comment