ஆம்புலன்சுக்கு வழிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ.2 வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் புதிய மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து திரும்பும் போது, பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து செல்ல ஏதுவாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி வழிவிட்டார்.

இந்த காட்சிப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் ரூ.67 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (1.11.2021) காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் கோயம்பேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தை திறக்க சாலை மார்க்கமாக தனது பாதுகாப்பு வாகனங்களுடன் முதலமைச்சர் சென்று கொண்டிருந்தார்.

வேளச்சேரி மெயின் ரோட்டில் குருநானக் கல்லூரி அருகே செல்லும் போது, பின்னால் 108 ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது. இதை கவனித்த முதலமைச்சர் மு..ஸ்டாலின் தனது பாதுகாப்பு வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வழிவிட பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் சாலையோரம் நிறுத்தப்பட்டு எந்த தடையுமின்றி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தினர். ஆம்புலன்ஸ் சென்ற பிறகு முதலமைச்சர் தனது பாதுகாப்பு வாகனங்களுடன் கோயம்பேடு புறப்பட்டு சென்றார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலர் தங்களது அலைபேசியில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மின்நுகர்வோர் தங்களது புகார்களை

இணைய வழியில் பதிவு செய்யும் புதிய திட்டம்

சென்னை, நவ.2 தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் புகார்கள் இணைய வழியில் பதிவு செய்யும் புதிய வசதி கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 10,000 மின்னூட்டிகள், 3.60 லட்சம் மின் மாற்றிகள், மற்றும் 2.88 கோடி  மின் நுகர்வோரின் புவியியல் தகவல்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மானக்கழகத்தில் கணினி சார்ந்த புவியியல் தகவல் அமைப்பில்  பதியப்பட்டுள்ளது. தி.மு.. அரசு பதவி ஏற்ற பிறகு அரசு துறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அனைத்து துறைகளையும் கணினி மயமாக்கவும், பொதுமக்களின் தங்களது குறைகளுக்கு விரைவில் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளை களையவும் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணவும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

அவரே பல இடங்களில் புகார்களை வாங்குகிறார். முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் அடிக்கடி சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவுப்படி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்துறையை புத்தாக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லகானி, தலைமையில் தினமும் பிரிவு வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் மின் துறையில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகளை கண்டறிவது மட்டுமல்லாமல், அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏற்படும் மின் இழப்புகளை சரி செய்யவும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி, மின்பகிர்மான கழகத்தின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு, மின் நுகர்வோர்களின் வசதி மற்றும் மேம் பாட்டினை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஏற்கெனவே தாழ்வழுத்த மற்றும் உயர்வழுத்த புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள், குறைந்த மின்பளு மற்றும் அதிக மின்பளுவிற்கான விண்ணப்பங்கள், தற்காலிக மின் இணைப்புக்கான விண் ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்படும் நிலையில் சமீபத்தில் பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பங்களும் இணையதளம் மூலம் பெறப்படும் வசதி கொண்டு வரப்பட்டது.

நகைக்கடன்கள் தள்ளுபடி : அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை, நவ.2 கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அர சாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில்; கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி , ஒரு குடும்பத்தினர் 31.03.2021 வரை 5 பவனுக்கு உட்பட்டு நங்க நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றதில் ஒரு சில கடன் தாரர்கள் தங்களது கடன் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த தொகை ரூ.1,114.64 கோடி என்றும் அதற்கு பிறகு 1.04.2021 முதல் 30.09.2021 வரை பொது நகைக் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாக திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர் அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ.6000 கோடி உள்ளது என்று முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, முதலமைச்சர் அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தில் 31.03.2021 வரை 5 பவுனுக்கு உட்பட்டு பொது நகைக்கடன் பெற்று அதில் சில கடன் தாரர்கள் நாளது தேதிவரை தங்களது நிலுவை தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசானை பிறப்பிக்கப்படும் நாள்வரை நிலுவையில் உள்ள ரூ.6,000 கோடி நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அரசு ஆணை இடுகிறதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் 1.04.2021ஆம் நாள் முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங் களுக்கு தள்ளுபடி தொகையினை அரசு வழங்கும் இவ்வாறு குறிப்பிட்டிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment