சென்னை, நவ.2 தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (1.11.2021) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நேற்று, 990 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,03,613 ஆக உள்ளது. நேற்று, 1,153 பேர் குணமடைந்தனர்.
ஆனால், மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 20 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதன்படி இதுவரை 36,136 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 11,309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment