வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு சென்னையில் 40.54 லட்சம் வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்களே அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு சென்னையில் 40.54 லட்சம் வாக்காளர்கள்: ஆண்களை விட பெண்களே அதிகம்

சென்னை, நவ.2 சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (1.11.2021) வெளியிடப்பட்டது. மொத்த வாக் காளர்கள் எண்ணிக்கை  40 லட்சத்து 57 ஆயிரத்து 61. இவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தை  உள்ளடக் கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக் காளர் பட்டியல் 1.1.2022ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2022ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும்  வாக்குச்சாவடி மய்யங்களிலும் பொதுமக்களின் பார் வைக்காக வைக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற் றுள்ளனவா என சரிபார்த்துக் கொள்ள லாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2022 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (1.1.2004ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-அய் பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7அய் பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8அய் பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8அய் பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலு வலரின் அலுவலகத்தில் இன்று (நேற்று) முதல் வருகிற 30ஆம் தேதி முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என கூறினார்.

No comments:

Post a Comment