சென்னை, நவ.2 வடசென்னை பகுதி மக்களுக்கு உலகத்தர மருத்துவ சேவை களை வழங்கும் வகையில், மாதவரம் மேம்பாலம் அருகே ஜவகர்லால் நேரு சாலையில், "பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷா லிட்டி" மருத்துவமனை அமைக்கப்பட் டுள்ளது.
1 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் 200 படுக்கை வசதிகளுடன், 9 தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனையில் இதய நோய், இரைப்பை, குடல், சிறுநீரக வியல், நரம்பியல், மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம் உள் ளிட்ட அனைத்து சிகிச்சை அளிக்கப்படு கிறது.
அவசர சிகிச்சை படுக்கை வசதிகள், 7 அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து சிகிச்சைக்கான படுக்கை வசதிகளும் அதிநவீன பை-பிளேன் கேத்லேப் உள் ளிட்ட பல உயர்தர வசதிகளும், சிடி மற்றும் எம்ஆர்அய் ஸ்கேன் உடன் கூடிய உயர்நிலை கதிரியக்கவியல் பிரிவு, பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, நிலை 4, இரைப்பை- குடல் அறிவியல் மய்யம் ஆகியவைகளை கொண்ட பன்னோக்கு மருத்துவமனையாக கட்ட மைக்கப்பட்டது. மேலும், கல்லீரல் மாற்று சிகிச்சை அறிவையும் இங்கு துவக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை யின் திறப்பு விழா, நிறுவன தலைவர் மருத்துவர் கீதா அரிப்ரியா தலைமையில் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிர மணியன் மருத்துவமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வட கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும் மாதவரம் சுதர்சனம் தொகுதி சட்டமன்ற உறுப்பின ருமான, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment