சென்னை, நவ.2 பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் ஷி.மண்டல் ஆலோசனை நடத்தினார். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுடன் நேற்று (1.11.2021) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் செய்துவரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார்கள். இந்த, விவாதத்தில் சாலைப் போக்கு வரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாட்டில் நடை பெறும் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பாக, ஆலோசனை நடத்தினார்.
இந்த, ஆலோசனையின் போது ஒப்பந் ததாரர்களின் கோரிக்கைகள், ஒப்பந்தப் பணிகளின் காலதாமதம், வெளிமாநில ஒப்பந்ததாரர்களால், ஏற்படுகின்ற பிரச் சனைகள் போன்றவை குறித்து ஆலோசிக் கப்பட்டது. மேலும், குடியாத்தம், திருவை யாறு, அச்சம்பத்து, பாகலூர் ஆகிய நகரங்களில் புறவழிச் சாலை இந்தாண்டே அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை பணிகளில் உள்ள மின் கம்பங் களை விரைந்து மாற்றி அமைப்பதன் மூலம் சாலை அமைக்கும் பணிகள் விரை வாக மேற்கொள்ளப்படும். இப்பணிக்கு முன்னுரிமை அளித்து டிசம்பர் 2021 மாதத்திற்குள் மின் கம்பம் மாற்றும் பணிகள் முடிவுப் பெற செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது.
No comments:
Post a Comment