வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை ரூ.268 உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை ரூ.268 உயர்வு

சென்னை, நவ.2 கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டு உள் ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வரு வதன் காரணமாக சமையல் எரிவாயு விலை இன்று  (2.11.2021) முதல் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூபாய் 268 உயர்ந்து ரூபாய் 2,133 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வீடு களில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக் கப்பட்டு உள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைக்கான விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.915.50க்கு விற்ப னையாகுகிறது.

கடந்த மாதம் விற்பனையான ரூ.915.50 என்ற விலையிலேயே இந்த மாதமும் விற்பனை ஆகும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள் ளனர். இருப்பினும் வணிகப் பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப் படுவதால் உணவகங்கள் நம்பி இருக்கும் உணவுப் பிரியர்கள் கவலை அடைந்துள்ளானர்.

No comments:

Post a Comment