சென்னை, நவ.2 அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத் துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரக செய்தி குறிப்பு
• போக்குவரத்து அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி யையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில், அதிக கட்ட ணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து களின் மீதான சிறப்பு சோதனை தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது.
• போர்க்கால அடிப்படையில் 12 மண்டல இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்களின் மூலம் செயலாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டது. வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும் மோட் டார் வாகன ஆய்வாளர்கள் இணைந்து அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக சிறப்பு சோதனை செய்ததில் 222 வாகனங் களுக்கு தணிக்கை அறிக்கை வழங் கப்பட்டது. அபராதமாக ரூ.3,11,500 மற்றும் வரி ரூ.57,000 வசூலிக்கப் பட்டது. இணக்கக் கட்டணமாக ரூ.4,32,500 நிர்ணயிக்கப்பட்டது. பின் வரும் 8 வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்தற்காகவும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக் கப்பட்டது.
• சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு இச்சோதனை வரும் 08.11.2021 வரை நடைபெற உள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free – 1800 425 6151) மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment