தியாகிகளுக்கு ரூ.1 லட்சம், நினைவுப் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

தியாகிகளுக்கு ரூ.1 லட்சம், நினைவுப் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.2 இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்ட போது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கருநாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரித்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை, மீண்டும் தமிழ்நாட்டோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.

அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசு அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என்று முதலமைச்சர்  மு..ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 110 எல்லைப் போராட்டத் தியாகிகளில், 14 பேருக்கு நேற்று (1.11.2021) முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய்க் கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். இந் நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சரவணன் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment