“மக்களின் கோபமே பாஜகவின் தோல்விக்கு காரணம்!” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

“மக்களின் கோபமே பாஜகவின் தோல்விக்கு காரணம்!”

இடைத்தேர்தலில் பாஜக அடைந்துள்ள தோல்வி, அக்கட்சி மீது நாடு முழுவதும் மக்கள் கொண்டுள்ள கோபத்தையே எதி ரொலிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி யுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஆணவத்தை விட்டுவிட்டு மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. பெட்ரோல் மற்றும் டீசலை  அதிக விலைக்கு விற்று பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்க ளின் வலியை அலட்சியம் செய்யக் கூடாதுஎன்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சுட்டுரையில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளால் மக்கள் வருத்தப்படுகிறார்கள். இதைத் தான் தேர்தல் முடிவு காட்டுகிறது. மேற்கு வங்கத் தில் பாஜகவின் கதை முடிந்து  விட்டது. நாங்கள் கடுமையாக போராடினோம். இடைத் தேர் தல் முடிவு எதிர்பார்க்கப் பட்டது போலவே அமைந் துள்ளது. தேர்தலுக்குப் பிந் தைய வன்முறைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று எங் கள் கட்சி அறிவுறுத்தியது. எதுவும் நடக்காதுஎன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் தெரிவித்துள் ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வெற்றி யும் எங்கள் கட்சி தொண்டரின் வெற்றி!” என்று கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுங்கள். யாருக்கும் அஞ்ச வேண்டாம்!” என்றும் தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment